உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்

 கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருவாலங்காடு: கூளூரில் கால்நடை கிளை நிலையம், அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் ஊராட்சியை சுற்றி மாவூர், ராமஞ்சேரி, காஞ்சிப்பாடி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 50,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. தற்போது, கால்நடைகளுக்கான சினை ஊசி போடுதல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு, 5 ---- 8 கி.மீ.,யில் உள்ள கனகம்மாசத்திரம் கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்வோர், சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் செல்ல வேண்டியுள்ளதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கூளூரில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும் என, விவ சாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை