உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  புயலில் சேதமடைந்த நீச்சல்குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப் போவது எப்போது?

 புயலில் சேதமடைந்த நீச்சல்குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப் போவது எப்போது?

திருவள்ளூர்: வர்தா புயலில் உடைந்து விழுந்து ஒன்பது ஆண்டுகளாகியும், புதிதாக கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நீச்சல் குளம் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இங்கு, தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டார், ஜெனரேட்டர், பாதுகாப்பு கருவிகள் உள்ளன. மேலும், ஆண், பெண் குளியலறை, ஆடை மாற்றும் அறை என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு, நீச்சல் பயிற்சியாளர்கள், தினமும் காலை - மதியம் மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்கின்றனர். அவ்வப்போது கோடைக்கால பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், நீச்சல் குளம் மூலம் கணிசமாக வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதி வயல்வெளியாக உள்ளதால், கால்நடைகள் உள்ளே வந்து சென்றன. அவற்றை தடுக்கும் வகையில், நீச்சல் குளத்தைச் சுற்றிலும், 2014ம் ஆண்டு, 13.80 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த சுற்றுச்சுவர், 2016ம் ஆண்டு ஏற்பட்ட 'வர்தா' புயலின் போது, 140 மீட்டருக்கு இடிந்து விழுந்தது. ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் சீரமைக்கவில்லை. இதனால், பாம்பு போன்ற விஷ பூச்சி நடமாட்டம் அதிகரித் துள்ளது. இதனால், நீச்சல் பயிற்சியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விளையாட்டு வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை