உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பெண்ணை அவதூறாக பேசிய இருவர் கைது

பெண்ணை அவதூறாக பேசிய இருவர் கைது

செய்துங்கநல்லூர் : பெண்ணை அவதூறாக பேசியதாக செய்துங்கநல்லூர் போலீசார் இருவரை கைது செய்தனர்.செய்துங்கநல்லூர் அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்தவர்கள் இசக்கிமுத்து மகன் பட்டாணி(30), சந்தானம் மகன் அருள்ராஜா(51) ஆகிய இருவரும் குலசேகரன்பட்டணம் கோயிலுக்கு வேடம் போட்டியிருந்தார்களாம். அப்போது இதே ஊரைச் சேர்ந்த ராஜ் மனைவி கண்மணி(34)யை அவதூறாக பேசினார்களாம். அவர்கள் சாமிக்கு வேஷம் போட்டிருந்ததால் அப்போது பொறுமையாக இருந்த கண்மணி தசரா முடிந்து சாமிக்கு காப்பு அவிழ்த்த பிறகு அவர் செய்துங்கநல்லூர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தாராம். செய்துங்கநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார். சப்இன்ஸ்பெக்டர் செல்வி மேல் விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை