உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தபால் நிலையத்தில் கூடுதல் சேவை: பல்லடம் வட்டார மக்கள் மகிழ்ச்சி

 தபால் நிலையத்தில் கூடுதல் சேவை: பல்லடம் வட்டார மக்கள் மகிழ்ச்சி

பல்லடம்: பல்லடம் துணை தபால் நிலையத்தில், இரவு 8.00 மணி வரை தபால் சேவையை நீட்டிக்க வேண்டும். சேதமடைந்த தபால் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் பரிந்துரையின் பேரில், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மனு அனுப்பினார். அந்த மனுவுக்கு தபால் துறையில் இருந்து பதில் கிடைத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பல்லடம் துணை தபால் அலுவலகத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும். ரயில் முன்பதிவு மையம் அமைப்பது குறித்து, இடத்தின் சாத்தியக்கூறு அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளும் மண்டல அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்லடம் துணை தபால் அலுவலகத்தில், தபால் அலுவலக சேவைகள், மூன்று மாத சோதனை அடிப்படையில், தினசரி, மாலை, 5.30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மூன்று மாத மதிப்பாய்வு அடிப்படையில் இச்சேவை நிரந்தரமாக்கப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மாலை, 4.00 மணி வரை மட்டுமே பெறப்பட்டு வந்த தபால்கள், இனி, மாலை, 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மனு மீது தபால் துறை உடனடி நடவடிக்கை எடுத்தது, பல்லடம் பா.ஜ. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை