பாங்க் ஆப் பரோடா இன்சூரன்ஸ் இழப்பீடு
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், தலைமைக்காவலராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் இயற்கை மரணமடைந்தார். பாங்க் ஆப் பரோடாவில் தமிழக அரசு ஊழியர்கள் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். அவரது குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிதிக்கான காசோலையை ராதாகிருஷ்ணனின் மனைவி அபர்ணாதேவியிடம் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் வழங்கினார். இதில், பாங்க் ஆப் பரோடா வங்கியின் கோவை துணை பிராந்திய மேலாளர் வி.கே.சவுடையா பங்கேற்றார்.