உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாளை தர்மபுரி - ஒசூர் கட்

 பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாளை தர்மபுரி - ஒசூர் கட்

திருப்பூர்: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில், நாளை (16ம் தேதி) தர்மபுரி, ஒசூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்லாது; மாற்று வழியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு --- ஒசூர் வழித்தடத்தில், பெலந்துார் - கார்மெலராம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, ரயில் பாதை பணி நடக்கிறது. இதனால், கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்:20642), கோவை - லோகமான்ய திலக் குர்லா எக்ஸ்பிரஸ் (எண்:11014) சேலம், திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியில் இயக்கப்படும். வழக்கமாக பயணிக்கும் வழியில், தர்மபுரி, ஒசூர் ஸ்டேஷன்களுக்கு செல்லாது. மறுமார்க்கமாக, மேற்கண்ட வழித்தட மாற்றப்படியே இரு ரயில்களும் இயங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ