உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூண்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பூண்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகர பா.ஜ., தலைவர் சண்முகபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருமுருகன்பூண்டி நகராட்சியில், புதிய குடிநீர் இணைப்பு, துாய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் முறைகேடு ஆகியவற்றில் நடைபெற்ற ஊழல்களை பொதுமக்களிடம் தெரியப்படுத்த வரும், 21ம் தேதி திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.அதற்கு முன்னதாக நகராட்சி நிர்வாக ஊழலை கண்டித்து வரும், 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அனைத்து வார்டிலும் துண்டுப்பிரசுரம் வழங்கி ஊழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை