| ADDED : நவ 29, 2025 06:03 AM
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், ரேஷன்பொருட்களை முதியவர்களுக்கு ரேஷன்கடை ஊழியர்கள் டிச., 2ம் தேதி வழங்கவுள்ளனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, 'இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்', தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடுகளுக்கு நேரடியாக சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், வரும் 2 மற்றும் 3ம் தேதி இரு நாட்கள், ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக வந்து பொருட்களை வினியோகிக்க உள்ளனர். இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.