உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காலி பாட்டில் விவகாரம் ; பார் உரிமையாளர்கள் முறையீடு 

 காலி பாட்டில் விவகாரம் ; பார் உரிமையாளர்கள் முறையீடு 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில், 244 பார்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பார்களின் உரிமம் வரும் ஜன. மாதம் வரை உள்ளது. பார் ஏலம் எடுத்தோர், சேகரமாகும் காலி மது பாட்டில்களை எடுத்துக் கொள்ளலாம் என்பது விதிமுறையில் உள்ளது. திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தாங்கள் வருமானம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் முறைகேடுகள் உள்ளதாகவும் கூறி, திருப்பூர் மாவட்ட பார் உரிமையாளர்கள் மண்டல மேலாளர் ராஜகோபாலிடம் அளித்த மனு: டாஸ்மாக் பார்களில், காலி மது பாட்டில்களை சேகரிக்கும் உரிமை உள்ளது. தற்போது பார்களில் சேகரமாகும் பாட்டில்களை தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளதாக, கூறி காலிபாட்டில்களை எடுக்கின்றனர். இதனால் எங்கள் வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்கள் உரிமம் இன்னும் முடியாமல் உள்ளது. கோர்ட் உத்தரவிட்டபடி காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம், இது போல் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ