உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரசின் மாத உதவித்தொகை நிறுத்தம்; மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 அரசின் மாத உதவித்தொகை நிறுத்தம்; மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை: நிறுத்தப்பட்டுள்ள உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள், கண்ணில் கருப்பு துணி கட்டி, குறிச்சிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை நால்ரோட்டில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜேஷ், மாவட்டச்செயலாளர் பழனிசாமி, மாவட்ட துணைத்தலைவர் மாலினி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அவர்கள் பேசியதாவது: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் பெற்று வந்த உதவித்தொகை ஆறு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், உதவித்தொகைக்கான ஆணை பெற்றவர்களுக்கும், தொகை வழங்கவில்லை. இதனால், பல ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், இலகுவான வேலை வழங்கி, தனியாக விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டம் நடத்தப்படுவதில்லை. அரசாணை இருந்தும், கூட்டம் நடத்தாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் பேசினர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ