உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரையாண்டு தேர்வு 10ம் தேதி துவக்கம்

 அரையாண்டு தேர்வு 10ம் தேதி துவக்கம்

திருப்பூர்: வரும், 10ல் துவங்கி 23 வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை வழங்கியுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வினாத்தாள்களை எமிஸ் தளத்தில், கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து, பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப பிரதி எடுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில், தேர்வுக்கு இரண்டு நாள் முன்பு (8ம் தேதி) வட்டார கல்வி அலுவலர் வாயிலாக, அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் அதை பாதுகாப்பாக வைத்திருந்து தேர்வு நடக்கும் நாளில், வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு http://exam.tnschools.gov.inஎன்ற இணையதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய தினம் நடுநிலைப் பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொண்டு, வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், 10 ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வு, 23ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை