உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இடுவாய் கிராம மக்கள் போராட்டம்; மாநகராட்சி மதிப்பளிக்க வேண்டும்

 இடுவாய் கிராம மக்கள் போராட்டம்; மாநகராட்சி மதிப்பளிக்க வேண்டும்

பல்லடம்: திருப்பூர் அருகே, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பை கொட்டுவதற்கு எதிராக, பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடுவாய், கரைப்புதூர், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் ஆகிய நான்கு கிராம மக்களும் போராட்டத்தில் கரம் கோர்த்தனர். போராட்டக் குழுவினர் கூறியதாவது: பொதுவாக, நகரம் மற்றும் கிராம பகுதிகளில் ஏற்படும் எந்த ஒரு பொது பிரச்னையாக இருந்தாலும், ஏதேனும் ஒரு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அல்லது விவசாய சங்கங்கள்தான் போராட்டத்தை முன்னெடுக்கும். ஆனால், சின்னக்காளிபாளையம் குப்பை பிரச்னையை பொறுத்தவரை, எந்த ஒரு அரசியல் கட்சிகளும் இதை முன்னெடுக்கவில்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நுாற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குவிந்தனர். பொதுமக்கள். குப்பைகளைக் கொட்டி, விவசாயத்தையும், கிராமத்தையும் அழித்துவிட வேண்டாம் என்ற ஒற்றை கோரிக்கையை மட்டுமே முன்வைக்கின்றனர். ஒட்டுமொத்த கிராமத்தின் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்பதாலேயே, பொதுமக்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். போராட்டத்தை மதித்து, மாநகராட்சியின் குப்பைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கிடங்குகளில், முறையாக தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மையை முறையாக பின்பற்ற வேண்டும். கிராம மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ