திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், தொழிலாளர் துறை அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் சமூக பாதுகாப்பு அலுவலகம், பி.என். ரோடு, மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வந்தது. அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே, ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா, ஆக. 25ல் நடந்தது. இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், நேற்று முதல் புதிய கட்டடத்தில் செயல்பட துவங்கியுள்ளன. விரைவில், தொழிலாளர் சமூக பாதுகாப்பு பிரிவு அலுவலகமும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அம லாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர், அவிநாசி ரோடு, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, ஒருங் கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த, தொழிலாளர் உதவி கமிஷனர் (சமரசம்), தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்), தொழிலாளர் துணை ஆய்வர் அலுவலகம், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் 1, 2 மற்றும் 3ம் வட்ட அலுவலகங்கள். காலேஜ்ரோட்டில் இயங்கி வந்த, முத்திரை ஆய்வர் - 1 மற்றும்2ம் வட்ட அலுவகங்கள், டிச. 1ம் தேதி முதல், புதிய கட்டடத்தில் இயங்கதுவங்கியுள்ளன.