உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரசு மருத்துவமனையில் சட்ட விழிப்புணர்வு 

 அரசு மருத்துவமனையில் சட்ட விழிப்புணர்வு 

திருப்பூர்: மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சமூக நலத்துறை ஆகியன சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நலத்துறை மைய நிர்வாகி ராஜேஸ்வரி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுபா, வக்கீல் சுதாகர், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி யுவராஜ் முன்னிலை வகித்து, பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சந்தோஷ் தலைமை வகித்து பேசுகையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், கருவில் உள்ள சிசுவை கண்டறியும் தடை சட்டம்; தவறு செய்வோர் மீது எப்படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது, இந்திய அரசியலைப்பின் சட்டத்தில், பெண்கள் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் உள்ள பிரிவுகள்; மனித நேயம் காக்க வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்தும் விளக்கினார். மாவட்ட சமூக நலத்துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் சமீரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சிராஜுதீன், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ