உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை: அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் உடுமலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். உடுமலை நகராட்சி அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் உடுமலை நகர துணைத்தலைவர் மாலினி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் பானுமதி, மாநிலக்குழு உறுப்பினர் சித்ரா, மாவட்ட துணைச்செயலாளர் செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும். கோவையில் கல்லுாரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண் டும். போதை கலாசாரத்துக்கு எதிராக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகரிக்க வேண் டும். பாலின சமத்துவம் குறித்த கல்வியை பாடமாக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி