மேலும் செய்திகள்
குறிச்சிக்கோட்டையில் மின் வாரிய பிரிவு அலுவலகம்
01-Sep-2025
உடுமலை: தமிழக மின்வாரியம், மடத்துக்குளம் உபகோட்டம், பாப்பான்குளம் மற்றும் உடுமலை உபகோட்டம் குறிச்சிக்கோட்டையில், புதிதாக உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டது. அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி அலுவலகங்களை திறந்து வைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். பாப்பான்குளம் அலுவலகத்தில், பாப்பான்குளம் கிழக்கு, மேற்கு, சாமராயப்பட்டி, பெருமாள்புதுார், சாளரப்பட்டி மற்றும் ரெட்டிபாளையம் கிராமங்களும்; குறிச்சிக்கோட்டை அலுவலகத்தில், காந்திநகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், குருவப்பநாயக்கனுார் மற்றும் சின்னகுமாரபாளையம் கிராமங்களும் பயன்பெறும் என, மின்வாரியத்தினர்தெரிவித்தனர்.
01-Sep-2025