உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கட்டுப்பாடிழந்த கார்; மின் கம்பம் மீது மோதல்

 கட்டுப்பாடிழந்த கார்; மின் கம்பம் மீது மோதல்

குன்னத்தூர்: புதுக்கோட்டையை சேர்ந்தவர் முகமது இம்ரான்கான், 32. பெங்களூரில் முதுகலை டாக்டர் பட்டம் படித்து வருகிறார். நேற்று பெங்களூரில் இருந்து காரில் கோவை நோக்கி வந்த போது, குன்னத்துார் - ஊத்துக்குளி ரோட்டில், முகமது இம்ரான்கானுக்கு, வலிப்பு ஏற்பட்டு, கார் நிலை தடுமாறியது. அதில், ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து பைக் மீது மோதி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது. அருகிலிருந்தவர்கள் அவரை காரில் இருந்து மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கார் மோதியதில் ஐந்து பைக் மற்றும் மின் கம்பம் சேதமானது. மின் வாரியம் ஊழியர்கள் உடனடியாக வேறு கம்பம் அமைத்தனர். விபத்து குறித்து, குன்னத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை