உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆங்கில புத்தாண்டு முதல் பாலிதீன் இல்லா மாநகராட்சி

 ஆங்கில புத்தாண்டு முதல் பாலிதீன் இல்லா மாநகராட்சி

திருப்பூர்: திருப்பூர் மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோரது அறிக்கை: திருப்பூர் மாநகரில் திடக்கழிவு மேலாண்மை பணி முழுமையாக மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நகரத் துாய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் 100 சதவீதம் குப்பை தரம் பிரிக்கப்பட்ட மாநகராட்சி என்ற இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பாலிதீன் பயன்பாடற்ற மாநகரமாக மாற்ற ஆய்வு கூட்டங்கள் நடத்தி ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, 60 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வீசி எறியப்படும் பாலிதீன் பொருள் பயன்பாட்டை தீவிரமாக கண்காணித்து, அவற்றை குறைத்து, அதற்கு பதிலாக அரசின் 'மீண்டும் மஞ்சப் பை' திட் டம் மூலம் மாற்று பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு வழங்கி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை கமிஷனர் தலைமையில் சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் அழிக்கப்பட்டன.இதுதவிர, வரும், 2026 ஜன. 1ம் தேதி முதல், 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாநகராட்சியாக' மாற்றும் வகையில், பொதுமக்கள் பாலிதீன் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்பாடு குறித்து 155 304, 1800 425-7023 மற்றும் 0421 2321500 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை