உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  எஸ்.ஐ.ஆர். படிவங்கள்; திணறும் தெற்கு தொகுதி

 எஸ்.ஐ.ஆர். படிவங்கள்; திணறும் தெற்கு தொகுதி

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் 65 சதவீத அளவிலான எஸ்.ஐ.ஆர். படிவங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ள நிலையில் இப்பணியில் பெரும் தொய்வு நிலை காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் அடிப்படையில் அதற்கான படிவம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது. இந்த படிவங்கள், ஏறத்தாழ, வினியோகம் செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் பூர்த்தி செய்த படிவங்கள் திரும்ப பெற்று பதிவேற்றம் செய்வதில் பெரும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள், 11ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஊழியர்கள், அரசியல்கட்சி பிரதிநிதிகள் மற்றும் பிற துறை அலுவலர்களும், தன்னார்வலர்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் தெற்கு தொகுதியில் 2,72,438 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2,49,395 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 91.5 சதவீதம் படிவங்கள் வழங்கப்பட்டு விட்டது. இதில் நேற்று வரை, 1,76,803 படிவங்கள் மட்டுமே பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. இப்படிவ விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 64 சதவீத படிவங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் வரும், 11ம் தேதிக்குள் நிறைவடையவுள்ள நிலையில், தேர்தல் பிரிவினரும், கட்சி பூத் ஏஜன்ட்களும் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், படிவங்களை திரும்ப பெறுவதில், மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ