உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குமுளிக்கு சிறப்பு பஸ் இயக்கம்

 குமுளிக்கு சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பூர்: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து குமுளி வரை பஸ்களை, திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. இந்த பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்படுகிறது. தினமும் மதியம், 12:15 மணி, 12:50, 2:15 மணி என, மூன்று பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து பயணி ஒருவருக்கு கட்டணம், 210 ரூபாய். குமுளியில் இருந்து பம்பைக்கு தொடர்ந்து இருமாநில பஸ்களும் இயங்குவதால், இந்த பஸ்களில் அய்யப்ப பக்தர்கள் பயணிக்கலாம். குழுவாக அல்லது, 30க்கும் மேற்பட்டோர் இங்கிருந்து பம்பைக்கு பயணிக்க, பஸ் தேவையெனில், மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள டிக்கெட் முன்பதிவை மையத்தை நாடலாம். ஒப்பந்த அடிப்படையிலான பஸ் இயக்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும், என, திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை