| ADDED : டிச 02, 2025 07:08 AM
திருப்பூர்: காங்கயத்தில் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு, புதிய கட்டடம் கட்ட, மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதியில், கோவை ரோட்டில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம் புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணியை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இந்த புதிய அலுவலகம், 1.90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில், இ-ஸ்டாம்ப் அறை, அலுவலகம், உணவருந்தும் அறை, சரக்கு அறை உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. 50 சதவீதத்துக்கு மேல் பணிகள் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக பணிகள் முடிக்கப்பட்டு திறக்கும் வகையில், பணிகள் விரைந்து நடந்து வருகிறது.