உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கால்நடை மருத்துவமனையில் முதல்வர் படைப்பகம் கூடாது

 கால்நடை மருத்துவமனையில் முதல்வர் படைப்பகம் கூடாது

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. செரங்காடு மண்டல் தலைவர் மந்திராசலமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், விட்டல் தாஸ் சேட்டின் பேரன் தினேஷ்குமாருடன் வந்து, குறைகேட்பு கூட்டத்தில் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1926ல், விட்டல் தாஸ் சேட், திருப்பூர் மத்திய பஸ்ஸ்டாண்ட் எதிரே, 1.96 ஏக்கர் நிலத்தை, கால்நடை பராமரிப்பு துறைக்கு தானமாக வழங்கினார். விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறும்வகையில், கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. கால்நடை மருத்துவ வளாகத்தில் முதல்வர் படைப்பகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக, பசுமை நிறைந்த மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். கால்நடை பராமரிப்பு துறைக்கு தானமாக வழங்கப்பட்ட அந்த இடத்தை, கால்நடை மருத்துவமனையை தவிர வேறு பணிகளுக்கு ஒதுக்கக்கூடாது என்கிற உத்தரவு உள்ளது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி, முதல்வர் படைப்பகம் அமைக்கப்படுகிறது. உடனடியாக அப்பணிகளை நிறுத்த வேண்டும் என, பா.ஜ., மற்றும் விட்டல்தாஸ் குடும்பத்தினர், பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை