| ADDED : டிச 07, 2025 05:43 AM
திருப்பூர்: 'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு, மண் பரிசோதனை, தண்ணீர் பரிசோதனை வேகமாக நடந்தது. விவசாயிகள், மரக்கன்று வளர்க்க அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தாராபுரம் அடுத்த வரப்பாளையத்தில், திருவேங்கடசாமி என்பவர் நிலத்தில், நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மலைவேம்பு - 700, மகோகனி - 500, செம்மரம் - 200, சந்தனம் - 200, சவுக்கு - 200 என மொத்தம், 1,800 மரக்கன்றுகள் நடப்பட்டது. நேற்று வரை, 2.68 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. வெகுவிரைவில், 3 லட்சம் இலக்கை பூர்த்தி செய்ய, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். 'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்ணில் அணுகலாம்.