உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கோர்ட் வளாகத்தில் பாதாள சாக்கடை திட்டம் 

 கோர்ட் வளாகத்தில் பாதாள சாக்கடை திட்டம் 

ஒ ருங்கிணைந்த கோர்ட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பது குறித்து அளவீடு செய்யும் பணி நடந்தது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான, மழைக்காலங்களில் மழை நீர் பெருமளவு தேங்கி நிற்கும் இடமாக இருந்த பகுதியில் தற்போது பல்வேறு அரசு துறை கட்டடங்கள் அமைந்துள்ளன. ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம்; மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், மாவட்ட போலீஸ் அலுவலகம், விருந்தினர் மாளிகை, அரசு துறை அலுவலர்கள் குடியிருப்பு ஆகியன இப்பகுதியில் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வெளியே செல்ல வசதியில்லாத நிலை காணப்பட்டது. இதையடுத்து நீதித்துறை நிர்வாகம் சார்பில் இதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் கழிவு நீர் வெளியேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக மாநகராட்சி சார்பில், ஆய்வு செய்து, அளவீடு மேற்கொண்டு திட்ட முன் வரைவு தயாரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதையேற்று, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் அப்பகுதியில் இதற்கான ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை