உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உண்மைக்கு புறம்பான தகவல்: மாநகராட்சி நிர்வாகம் மீது புகார்

 உண்மைக்கு புறம்பான தகவல்: மாநகராட்சி நிர்வாகம் மீது புகார்

பல்லடம்: திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை இடுவாய் கிராமத்தில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற உள்ள நிலையில், இடுவாய் கிராம மக்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாநகராட்சி மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பை கொட்ட முயற்சித்து வரும் சின்னக்காளிபாளையம் பகுதியில், மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க கிளை வாய்க்கால் உள்ளது. இதற்கு உட்பட்டு, 113 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், மாநகராட்சி நிர்வாகம், பி.ஏ.பி., பாசன வாய்க்கால் இருப்பதை மறைத்ததுடன், அருகே, குடியிருப்புகளே இல்லை என்றும், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் மற்றும் நீர்நிலைகள் இல்லை எனவும் உண்மைக்கு புறம்பான தகவல் தெரிவித்து உள்ளது. குப்பை கொட்ட நினைக்கும் இடத்துக்கு எதிரிலேயே, மாநகராட்சி அறிவியல் பூங்கா உள்ளது. மேலும், இடுவாய் கிராமத்தில், குப்பைகள் கொட்டக்கூடாது என, கிராம மக்கள் ஏற்கனவே நடந்த கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனையும் மறைத்து, சென்னை ஐகோர்ட்டில், மாநகராட்சி நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி உள்ளது. இதையெல்லாம், பொதுமக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெளிவுப்படுத்தி உள்ளோம். இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில், பொதுமக்களின் நியாயமான போராட்டம் நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை