| ADDED : டிச 02, 2025 06:25 AM
உடுமலை: உடுமலையில், குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி வருவதோடு, பொதுமக்களை கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர். உடுமலை நகரிலுள்ள, 33 வார்டுகளிலும், தெரு நாய்கள் அபரிமிதமாக காணப்படுகிறது. அதிலும், குட்டைத்திடல், தளி ரோடு ரயில்வே மேம்பாலம், பாலாஜி நகர் சுற்றுப்பகுதிகளில், ஒவ்வொரு குழுவிலும், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை, ரோட்டில் நடந்து செல்லும் குழந்தைகள், பொதுமக்களை விரட்டிச்சென்று கடிக்கின்றன. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி, விபத்துக்களை ஏற்படுத்துவதால், மக்கள் பாதிக்கின்றனர். அதே போல், நகரை ஒட்டியுள்ள பெரிய கோட்டை ஊராட்சி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவு தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.