உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குடிநீர் குழாய் உடைப்பு : வாகனங்கள் சேதம்

 குடிநீர் குழாய் உடைப்பு : வாகனங்கள் சேதம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு, போயம்பாளையம், சினோகா நகரில், தனியார் மருத்துவமனை அருகே பதிக்கப்பட்ட குழாயில் தண்ணீர் அழுத்தத்தால் திடீரென அதிக சத்தத்துடன் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பீறிட்டது. நீரின் அழுத்தத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் வேன் ஒன்றின் முன்புற கண்ணாடி உடைந்தது. பைக் ஒன்றின் முகப்பு லைட் மற்றும் முன் பாகம் உடைந்து சேதமானது. தண்ணீருடன் மண் வீசியதில் அங்கு நின்று கொண்டிருந்த கார் மற்றும் கடை முழுவதும் மண் சிதறியது. ரோடு முழுவதும் குடிநீர் வெள்ளம்போல் சென்றது. பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை