உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரூ.7.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்

 ரூ.7.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருப்பூர்: அம்பேத்கர் நினைவு நாள் முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், வித்யா கார்த்திக் மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று உதவிகளை வழங்கினார். கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித் முன்னிலை வகித்தனர். முன்னதாக அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறை, தாட்கோ திட்டம், வருவாய் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் மொத்தம் 1,927 பேருக்கு 7.17 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை