2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம்
உடுமலை; குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டியில், ஒன்றிய அலுவலகம் அருகில், மகளிர் சுய உதவிக்குழுக்கான கட்டடம் கட்டும் பணி, கடந்த 2021ல் துவங்கியது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 75 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய பணி, கடந்த, 2023ல் நிறைவு பெற்றது. பணிகள் நிறைவு பெற்று, இரண்டு ஆண்டுகளாகியும் கட்டடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. பயன்படுத்தப்படாமல் இருப்பதால், கட்டடம் பொலிவிழந்து வருகிறது.மேலும், சுய உதவிக்குழுக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படாமலேயே பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள், கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி, அப்பகுதியினர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.