உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / வியாபாரியை கார் ஏற்றி கொல்ல முயற்சி: அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கைது

வியாபாரியை கார் ஏற்றி கொல்ல முயற்சி: அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கைது

திருவண்ணாமலை, திமிரி அருகே, இளநீர் வியாபாரி மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற, அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவரை, போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சி, அ.தி.மு.க., கவுன்சிலர் சங்கீதா, 35. இவரின் கணவர் நெடுஞ்செழியன், 39. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரி ரவி, 55, என்பவருக்கும், முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் ரவி, ஆற்காட்டில் இளநீர் வியாபாரம் முடித்து, சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் பெரிய உப்புபேட்டை பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார். அங்கு வந்த நெடுஞ்செழியனுக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவி அங்கிருந்து புறப்பட்டு ஆற்காடு - விளாப்பாக்கம் சாலையில் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது, நெடுஞ்செழியன் காரை ஏற்றி கொல்ல முயன்றார். இதில், படுகாயமடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திமிரி போலீசார், நெடுஞ்செழியனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை