உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவு

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, நேற்று சண்டிகேஸ்-வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 24ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கடந்த, 3ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்-றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அய்யங்கு-ளத்தில், 3 நாட்கள், தெப்பம் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்ட நிலையில், நேற்றிரவு, 7ம் தேதி சண்டிகேஸ்-வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்-டனர். இத்துடன் திருவண்ணாமலை தீப திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி