ப.வேலுார்: பொத்தனுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்-ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவ-னங்கள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் என, டவுன் பஞ்.,க்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றனர். இது தவிர டவுன் பஞ்., கட்ட-டங்கள், வாரச்சந்தை உள்ளிட்டவற்றில் குத்-தகை அடிப்படையில், உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நடப்பு நிதியாண்டில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனம் போன்றவற்றில் வரி இனங்கள் நிலுவையில் உள்ளது.எனவே, டவுன் பஞ்.,க்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என, டவுன் பஞ்., செயல் அலுவலர் வேல்மு-ருகன் கேட்டுக்கொண்டுள்ளார். வரி செலுத்-துவோர் வசதிக்காக, பொத்தனுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் வரி வசூல் மையம், ஞாயிற்றுக்-கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்க-ளிலும், காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை செலுத்தலாம். நிலுவையில் உள்ள வரி-களை செலுத்தி, டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு ஒத்-துழைக்க வேண்டும் என பொத்தனுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் வேல்முருகன் வேண்-டுகோள் விடுத்துள்ளார்.