உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வசிப்பவர் மதுசூதனன், இங்குள்ள, வட மாநில மடம் ஒன்றின் மேலாளர். இவருக்கு, ஐந்து குழந்தைகள். இதில் ஸ்ரீனிவாசன், 10, என்ற மகனும் இருந்தார். 23ம் தேதி, விளையாட சென்ற ஸ்ரீனிவாசன், வீடு திரும்பவில்லை.மதுசூதனன் புகாரில், ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்து, அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம், கொள்ளிடம் ஆற்றில் மிதந்த சிறுவன் ஸ்ரீனிவாசன் உடலை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை