உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / 15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்; கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும்

15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்; கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும்

திருச்சி : திருச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க வேண்டி, ஒண்டி கருப்பசாமி கோவிலுக்கு, 15 கிடாக்கள் வெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கு கறி விருந்து அளித்தார், அமைச்சர் நேரு. 'முறையான அழைப்பு இல்லை' என, கட்சி நிர்வாகிகள் பலர், இதில் அதிருப்தி அடைந்துள்ளனர். திருச்சி பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பில், 492 கோடி ரூபாய் செலவில், 2022ல் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியது. மூன்றாவது ஆண்டாக நடந்து வரும் பணிகள் முடிந்து, வரும் மே, 9 அன்று முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது.பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க வேண்டி, அப்பகுதியில் உள்ள ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில், நேற்று, 15 ஆட்டு கிடாக்கள் வெட்டி, அமைச்சர் நேரு வழிபாடு நடத்தினர்.இதற்காக நேற்று காலை, 9 மணிக்கு, ஒண்டி கருப்பசாமி கோவிலுக்கு வந்த அமைச்சர் நேரு, அங்கு வழிபாடு நடத்தி, கிடாக்கள் வெட்டும் வரை இருந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கடும் அதிருப்தி

வேண்டுதலுக்காக வெட்டப்பட்ட கிடாக்கள் மற்றும் 250 கிலோவுக்கு மேல் கோழிக்கறி சமைக்கப்பட்டு, கோவில் வளாகத்திலேயே, தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு, நேற்று மதியம் கறி விருந்தளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, அமைச்சர் நேரு அறிவுறுத்தலில், திருச்சி மத்திய மாவட்ட துணை செயலர் முத்துச்செல்வம் செய்திருந்தார். இவர், கட்சியில் தனக்கு பிடிக்காத நிர்வாகிகளுக்கு விருந்து குறித்து முறையாக தெரிவிக்கவில்லை என்பதால், திருச்சி மேற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் பலரும், விருந்து விவகாரத்தில் அமைச்சர் நேரு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 96 )

PATTALI
ஏப் 27, 2025 20:55

கடவுள் இல்லை என்று தெரு முனை பிரச்சாரங்கள் செய்து திராவிடக்கட்சிகளை வளர்த்தது எல்லாம் காற்றிலே பறந்து போச்சு. பொய்யர்கள்..


Parthasarathy Badrinarayanan
ஏப் 23, 2025 11:01

இந்த விருந்து.?


adiyamaan
ஏப் 22, 2025 13:10

ஒண்டி வீரன் எனும் மொழி தெலுங்கர்களான கே.என் நேருவும் தெலுங்கர் என்பதாலும் ஸ்டாலின் வரவேற்கிறாற்போல


Karuthu kirukkan
ஏப் 22, 2025 06:12

அடே ஒண்டி கருப்பா நீ இருந்தா கேளு, உன்னை நம்பி வாழும் தமிழ்நாட்டு மக்கள கைவிட்டுராதே, ஏன் இந்த தமிழ்நாட்லே தினமும் கொலை, கொள்ளை, போராட்டம்னு நடக்குது, பள்ளி குழந்தைகள் மானபங்கப்படுத்துவது. நம்மிடத்தே இவனுக கடவுள் இல்லைனு சொல்லுவானுக காரியம் ஆகணும்னா உனக்கு கிடா விட்டுவானுக


Sivakumar
ஏப் 22, 2025 01:32

என்னமோ எல்லா திராவிட கட்சிக்காரர்களும் சூளுரைத்த நாத்தீகவாதிகள் போல கட்டமைத்து, அவர்களின் அவநம்பிக்கையை தோலுரிப்பது போல இங்கே நாடகம் வேண்டாம். சேகர் பாபு, PTR என பலர் திமுகவில் இந்து சமயத்தின் அணைத்து சம்பிரதாயங்களையும் முன்னின்று நடத்துவார்கள். இவர்கள் அதை மறைத்து செய்வதில்லை.


adalarasan
ஏப் 21, 2025 22:16

ஆமாம், கெடா வெட்டி சாமிக்கு படைப்பது,mooda நம்பிக்கை இல்லையா,இவஙக கொள்கைப்படி?


thehindu
ஏப் 21, 2025 21:45

கோவில்கள்தான் இந்துமதவாத குண்டர்களின் பயங்கரவாதிகளின் புகலிடம். அவர்களிடம் இருந்து தப்பிக்க இதுதான் வழி என்ற இந்துமதவாத மூட நம்பிக்கை


N Sasikumar Yadhav
ஏப் 22, 2025 03:24

நீங்க பயங்கரவாத கும்பலுங்க மாதிரியே கருத்து என்ற பெயரில் கண்டதையும் எழுதுகிறீர்கள்


Kasimani Baskaran
ஏப் 21, 2025 20:51

சமாதியில் தயிர் வடை வைப்பது போன்ற அங்கீகரிக்கப்பட்ட பகுத்தறிவில் கிடா வெட்டுவதும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.. உடன்பிறப்புக்ககள் குதூகலம்.


Matt P
ஏப் 21, 2025 20:50

குறிப்பிட்ட வயசாயிட்டுன்னா நாற்காலி வேணும். என்ன தான் சம்பாதிச்சாலும் அடங்கி தான் ஆகணும். இயற்கையின் நியதி. ஆடி அடங்கும் வாழ்க்கையடா? மக்களும் விரும்புகிறார்கள்- எல்லாம் நல்ல படியா நடக்கணும் கடவுளே.


Matt P
ஏப் 21, 2025 20:45

15 கிடாக்கள் வாய் இல்லஆ ஜீவன்கள். என்ன பாவம் செய்தன? மனிதர்கள் என்ன தப்பு செய்தாலும் தப்பித்து விடுகிறார்கள்


முக்கிய வீடியோ