உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாரஸ் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி

டாரஸ் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி

மயிலம் : மயிலம் அருகே பைக் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் இறந்தார்.மயிலம் அடுத்த விளங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் சக்தி சண்முகம், 19; மயிலத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று கல்லுாரியில் கட்டணத்தை செலுத்தி விட்டு பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.மதியம் 12:45 மணியளவில் மயிலம் - செண்டூர் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி பைக் மீது மீது மோதியது. இதில் சக்தி சண்முகம் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை