உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மயிலம் தொகுதியில் 100 சதவீத படிவம் விநியோகம்

 மயிலம் தொகுதியில் 100 சதவீத படிவம் விநியோகம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வாக்காளர்கள் பட்டியலில் உள்ள 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்களில், 17 லட்சத்து 7 ஆயிரத்து 606 பேருக்கு (99 சதவீதம்) கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மயிலம் தொகுதியில் 100 சதவீத கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், கடந்த மாதம் 4ம் தேதி துவங்கியது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், நேரடியாக மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். நேற்று வரை செஞ்சி சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 232 படிவங்கள், மயிலம் தொகுதியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 553, திண்டிவனம் தொகுதியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 736, வானுார் தொகுதியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 29, விழுப்புரம் தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 71, விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 335, திருக்கோவிலுார் தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 650 படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 பேரில், 17 லட்சத்து 7 ஆயிரத்து 606 பேருக்கு, கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களில் 98.85 சதவீதம் பேருக்கு படிவங்கள் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் 68 ஆயிரத்து 225 வாக்காளர்களுக்கு மட்டுமே கணக்கெடுப்பு படிவம் வழங்க வேண்டியுள்ளது. மாவட்டத்தில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 208 பேர் (86.03 சதவீதம்) வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப அளித்துள்ளனர். மாவட்டத்தில் மயிலம் தொ குதியில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி 100 சதவீதம் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகு தியில் 92 சதவீத படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை