உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருடுபோன 11 மொபைல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருடுபோன 11 மொபைல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் திருடுபோன 11 மொபைல்போன்கள் போலீசார் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.விக்கிரவாண்டி பகுதியில் மொபைல்போன் மாயமானது தொடர்பாக 11 புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. மாயமான மொபைல்போன் ஐ.எம்.இ.ஐ., நம்பர் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் பயன்படுத்தும் சி.ஐ.இ.ஆர்., செயலி மூலம் மாயமான மொபைல்போன்களை பயன்படுத்துவோர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மொபைல்போன்களை உரியவர்களிடம் டி.எஸ்.பி., சரவணன் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யசீலன், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செந்தில் முருகன், தனிப்பிரிவு ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை