மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
1 hour(s) ago
முக்கியத்துவம் இல்லை: உடன் பிறப்புகள் அப்செட்
1 hour(s) ago
எல்லாமே ஒரு கணக்கு தான்: தந்தை வழியில் தனயன்
1 hour(s) ago
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
1 hour(s) ago
தமிழக அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்கள் மீது முதல்வர் கருணை காண்பிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2011 - 2012ம் கல்வியாண்டில் 16 ஆயிரம் பேர், பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்க்கைக் கல்வி ஆகிய பாடங்களில் பணியமர்த்தப்பட்டனர். அப்போது மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியமாக சம்பளம் வழங்கப்பட்டது. சம்பள உயர்வு முதலில், 2014ம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து சம்பள உயர்வு கடந்த 2017ம் ஆண்டில் 700 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது. கடைசியாக 2021ம் ஆண்டு பிப்ரவரி 2,300 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையொட்டி தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என இன்றைய முதல்வர் ஸ்டாலின், அப்போது அறிவித்தார். தி.மு.க.,வின் பணி நிரந்தரம் வாக்குறுதியை நம்பி பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் தி.மு.க.,விற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். முதல்வராக ஸ்டாலின் வருவதற்கு உறுதுணையாக இருந்து, கைகொடுத்த பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து கைதுாக்கி விடுவதே நன்றி கடனாக இருக்கும். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், பல கட்ட போராட்டங்களை நடத்திய பின், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும்போது உதவித்தொகை என்ற பெயரில் 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் அரசு வேலை, எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையில் வேலையில் சேர்ந்த 16 ஆயிரம் பேரில் ,இதுவரை 4000 பேர் மரணம், பணி ஓய்வு, ராஜினாமா ஆகிய காரணங்களால் அந்த குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிக வேலையில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மீது முதல்வர் கருணை காட்ட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago