உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

 ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேல்தணியாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாயம், 58. இவர், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் வெகு நேரமாக வீடு திரும்பவில்லை. உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்த போது அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை