பெண் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை
விழுப்புரம்: வளவனுார் அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் அடுத்த சேர்ந்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது உறவினர் மூர்த்தி, 40; இவர்களுக்குள், நிலம் பாகப் பிரிவினையில் முன் விரோதம் உள்ளது. கடந்த 7ம் தேதி, குடிபோதையில் கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த கலைச்செல்வனின் தாய் லட்சுமியை, 60; திட்டி, தாக்கியுள்ளார். புகாரின் பேரில், வளவனுார் போலீசார், மூர்த்தி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.