உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரெட்டணை பள்ளியில் வண்ண விழா

 ரெட்டணை பள்ளியில் வண்ண விழா

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் வண்ண விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். முதன்மை நிர்வாக இயக்குனர் வனஜா சண்முகம் விழாவை துவங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைத்து வண்ணகளிலும் உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்களை கொண்டு வகுப்புகளை அலங்கரித்தனர். மாணவர்கள் பழங்களைப் போன்றும், காய்கறிகளைப் போன்றும், வண்ண உடை அணிந்து அவைகளில் உள்ள ஊட்டச்சத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் விழாவில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி பரிசு வழங்கினார். பள்ளியின் முதல்வர் சங்கீதா கோபிநாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ