உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அம்பேத்கர் நினைவு நாள் துணை முதல்வர் மரியாதை

 அம்பேத்கர் நினைவு நாள் துணை முதல்வர் மரியாதை

விழுப்புரம்: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, விழுப்புரத்தில், அம்பேத்கர் சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாநில துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் லட்சுமணன் எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி, மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் வரவேற்றனர். துணை முதல்வர் உதயநிதி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், பேரூராட்சி செயலாளர் ஜீவா, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ