உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  காஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து

 காஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து

செஞ்சி: செஞ்சி அருகே காஸ் சிலிண்டர் லோடு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகே உள்ள காஸ் குடோனில் இருந்து திருவண்ணாம லை தனியார் நிறுவனத்திற்கு 357 காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி நேற்று மாலை 4:30 மணியளவில் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றது. லாரியை செஞ்சி அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன், 57; ஓட்டினார். செஞ்சி கோட்டை அருகே சென்ற போது திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த கார் காஸ் சிலிண்டர் லாரியின் குறுக்கே வந்துள்ளது. கார் மீது மோதுவதை தவிர்க்க லாரி டிரைவர் பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து சிலிண்டர்கள் சிதறின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீசா ர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். லாரியை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதமானது காரில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த நாகேஷ்வர்ராவ் மனைவி ஸ்ரீ தேவி, 58; லேசான காயமடைந்தார்.செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி