உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் பன்னாட்டு மாணவர் தினம்

ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் பன்னாட்டு மாணவர் தினம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓமந்துார் ஸ்ரீராம் ஈஸ்வரி ஐ.ஐ.டி., நீட் பள்ளியில், பன்னாட்டு மாணவர் தினம் மற்றும் அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முரளி ரகுராமன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நான்சிமதுளா வர வேற்றார். நிகழ்ச்சியில், அப்துல்கலாம் பள்ளி, கல்லுாரி பருவ நிகழ்வு, இஸ்ரோவில் ஏவுகனை அனுப்பிய நினைவு, குடியரசு தலைவராக அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றை நான்கு அரங்குகளில் மாணவர்கள் காட்சிப்படுத்தியும், நடித்தும் காட்டினர். இதில், மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அப்போது, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ