மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
1 hour(s) ago
முக்கியத்துவம் இல்லை: உடன் பிறப்புகள் அப்செட்
1 hour(s) ago
எல்லாமே ஒரு கணக்கு தான்: தந்தை வழியில் தனயன்
1 hour(s) ago
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
1 hour(s) ago
வி க்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா, 67 ஆயிரத்து 757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரசாரத்தின்போது, கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். ஊராட்சிகளில் உலர் களங்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வசதிக்காக கூடுதல் பஸ் வசதி, சுடுகாடு வசதி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றார். தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரை நேரடியாக அணுகி, விக்கிரவாண்டி தொகுதிக்கு 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்துள்ளாார். அதன்பின், தொகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கிராம ஏரிகள் சீரமைப்பு, விக்கிரவாண்டி, காணை குப்பம், பனமலைப்பேட்டையில் துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி, மண்டகப்பட்டு கிராமத்தில் சிட்கோ மூலம் தொழிற்சாலை துவங்கிட, திருக்கோவிலுார் சாலையை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர், கழிவறை பணிகளை துரிதப்படுத்துவது. விக்கிரவாண்டி வேளாண்மை துறை அலுவலக புதிய கட்டடத்தை திறப்பது. முண்டியம்பாக்கம் - ஒரத்துார் சாலையில் ரயில்வே மேம்பால பணி உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என எம்.எல்.ஏ., அரசிடம் வலியுறுத்தி வருகிறார். இதற்காக துறை உயர் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தியும் கோப்புகள் கிடப்பில் உள்ளன. இடைத்தேர்தலின் போது, அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிற எம்.எல்.ஏ.,வின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago