மோழியனுார் தடுப்பணை நிரம்பியது
மயிலம்: மயிலம் அடுத்த மோழியனுார் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீர் நிரம்பியது. மயிலம் பகுதியில் செல்லும் சங்கராபரணி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகும். இந்த பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் ஆற்றில் அதிகளவில் நீர் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது. தீபாவளி விடுமுறை நாளையொட்டி, சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஏராளமனோர் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.