உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா போதையில் இளைஞர்கள் : அச்சத்தில் சிதறியோடிய மக்கள்

கஞ்சா போதையில் இளைஞர்கள் : அச்சத்தில் சிதறியோடிய மக்கள்

விழுப்புரம்: தீபாவளி பண்டிகை தினத்தில் கஞ்சா போதையில் சுற்றிய இளைஞர்களை பிடிக்க முடியாமல் திணறிய போலீசாரால் பொதுமக்கள் அச்சத்தோடு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் நகர பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் பொதுமக்களின் கூட்டம் கடை வீதிகளில் அலைமோதியது. கூட்டம் நிறைந்த கடை வீதிகளில், இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில், இரு சக்கர வாகனங்களில் சைலென்சர்களில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபடி சுற்றித் திரிந்தனர். இதனை தட்டிக்கேட்ட சிலரை, போதை இளைஞர்கள் தாக்கியதோடு, அவர்களுக்குள்ளேயே கூச்சலிட்டபடி சென்றனர். இவர்களின் அதிவேக வாகனத்திற்கு வழிவிடுவதற்காக மக்கள் பல இடங்களில் சிதறி அச்சத்தோடு ஒதுங்கினர். அதே போல், இரவு 11:00 மணிக்கு மேல், இளைஞர்கள் பலர் போதையில், இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக கூச்சலிட்டபடி சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்களை தங்களின் குடும்பங்களோடு வெளியே வந்து வாங்கி செல்ல கூட அச்சப்பட்டனர். போலீசார், நகரின் எல்லை பகுதிகளில் காட்டும் அக்கரையை சிறிதாவது நகருக்குள்ளேயும் காட்டுவதற்கான நடவடிக்கையை எஸ்.பி., எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ