காவல்துறை போட்டியில் பதக்கம் வென்ற காவலர்
விழுப்புரம்: அகில இந்திய காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற விழுப்புரம் காவலரை எஸ்.பி., பாராட்டினார் அகில இந்திய அளவில், காவல் துறையினருக்கான விளை யாட்டு போட்டிகள், ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடந்தது. கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், பங்கேற்ற விழுப்புரம் மாவாட்ட முதல்நிலைக் காவலர் வருண்குமார், கராத்தே பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் சாதித்த காவலர் வருண்குமாரையும், கராத்தே பயிற்சியாளர் குணசேகரனையும், விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பாராட்டினர்.