| ADDED : டிச 02, 2025 05:37 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் மாநில அளவில் நடந்த கால்பந்து போட்டியில் வந்தவாசி அணி முதலிடம் பிடித்தது. திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில், மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. நகர தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த போட்டியில் கேரளா, சென்னை, வேலுார், கன்னியாகுமாரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் வந்தவாசியை சேர்ந்த அணி முதலிடமும் திண்டிவனம் அணி இரண்டாமிடமும், சென்னை அணி மூன்றாமிடமும், திண்டிவனம் மற்றொரு அணி நான்காமிடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே 30 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் மஸ்தான் பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் திண்டிவனம் தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.