உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

 புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

விழுப்புரம்: காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில் கடத்திய சேலம் வாலிபர்களை போலீ சார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசையர் காரை சோதனை செய்தனர். அதில் , சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த முல்லைவாடி புதிய காலனியைச் சேர்ந்த சுகந்தன், 28; மற்றும் தீபக், 20; ஆகியோர் 480 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, சுகந்தன், தீபக்கை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவில் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வ ழக்குப் பதிந்து, சுகந்தன், தீபக்கை கைது செய்தனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை